தினம்தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் தோழர் சிறி சபாரட்ணத்தின் தலைமையை ஏற்று ஈழ விடுதலைக்காக தமது இன்னுயிர்களைத் தியாகம் செய்த எமது வீரமைந்தர்களின் தியாகங்கள் அளப்பரியவை.
எமது ஈழ விடுதலைப் போராட்டம் திசை திருப்பப்பட்டு பாசிச புலிகளின் தலைவர் பிரபாகரனின் ஏக பிரதிநிதித்துவ மோகத்தின் நிமித்தம் புலிகள் தமது பாசிச கொள்கையை பரவவிட்டு எம்மியக்கத்தின் உன்னதமான செயலதிபர் சிறிசபாரத்தினம் உட்பட பல தோழர்களையும் காவு கொண்டு இரு தசாப்தங்களுடன் ஈராண்டுகள் முடிவுற்றாலும் எம் இதயங்களில் வாழுகின்ற அந்த வீர மைந்தர்களை தமிழீழ விடுதலை இயக்கத்தினராகிய நாம் அவர்களை என்றென்றும் நன்றியுடன் நினைவுகூர கடமைப்பட்டுள்ளோம்.
புலிப்பாசிசம் பகிரங்கமாக சகோதரப் படுகொலைகளை கட்டவிழ்த்து விட்ட சித்திரை மாதம் முப்பாதாம் திகதி முதற் கொண்டு மே மாதம் ஆறாம் திகதி வரையான அந்த துரோகம் விளைந்த நாட்களை வீரமைந்தர்கள் தினம் எனக் கொண்டு அவர்களின் தியாகங்களை உள்ளங்களில் இருத்தி அவர்களுக்கான அஞ்சலியை செலுத்துமுகமாக இந்த புனித தினங்களில் தாயகத்திலும் புலம்பெயர் தேசங்களிலும் நடைபெற இருக்கின்ற அஞ்ஞசலி நிகழ்வுகளில் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு தமிழீழ விடுதலை இயக்கத்தினராகிய நாம் தோழமையுடன் அனைவரையும் அழைக்கின்றோம்.
‘நாம் வன்முறை மீது காதல் கொண்ட மன நோயாளிகளோ அன்றி அது போன்ற நோய்களால் பாதிக்கப்ட்டவர்களோ அல்ல: மாறாக ஒரு தேசத்தின் விடுதலைக்காக போராடும் போராளிகள்” - தேசபிதா தங்கத்துரை.
தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ)
தொடர்புகட்கு :-
0049 - 1733 932 687
0049 - 1520 458 5172
0049 - 1701 786 194
Wednesday, 23 April 2008
”போராளிக் குழுக்களுக்கு உள்ளேயே நடந்த மோதல் காரணமாகத்தான் போராட்டம் பலவீனமாகி விட்டது” சட்டசபையில் தமிழக முதல்வர்
”போராளிக் குழுக்களுக்குள்ளேயே நடந்த மோதல் காரணமாகத்தான் இந்த போராட்டம் பலவீனமாகி விட்டது” என்று தமிழக முதல்வர் கலைஞர் சட்டசபையில் வருத்தம் தெரிவித்துள்ளார்.
சட்டசபையில் இன்று (ஏப்ரல் 23) கேள்வி நேரம் முடிந்ததும் ஜி.கே.மணி (பா.ம.க.) எழுந்து இலங்கை பிரச்சினை குறித்து ஒரு தீர்மானம் கொண்டு வந்தார். இதன் மீது சுதர்சனம் (காங்கிரஸ்), கண்ணப்பன் (ம.தி.மு.க.) ஆகியோர் பேசினார்கள்.
இதற்கு பதில் அளித்து முதல் அமைச்சர் கருணாநிதி கூறியதாவது: ”இந்த தீர்மானத்தை பரிவுணர்வு, இரக்க சிந்தனை, தமிழர்களுக்கு உதவிட வேண்டும் என்ற பாச மனப்பான்மையோடு கொண்டு வந்து அதே அடிப்படையில் விவாதம் நடத்தி நிறைவேற்றி இருந்தால் நமக்கு மிகுந்த ஆறுதலாக அமைந்திருக்கும். எந்த நோக்கத்தோடு இந்த தீர்மானத்தை கொண்டு வந்தாரோ அந்த நோக்கம் சிதைகின்ற வகையில் சில வார்த்தை பிரயோகம் அமைந்ததால் வருத்தப்படுகிறேன்.
இந்த அவையை இந்திய பேரரசின் நிர்வாகத்தில் நடத்திக் கொண்டிருக்கிறோம். இங்கு நிறைவேற்றும் தீர்மானம் இந்திய அரசின் ஆணிவேரை அகற்றிடும் வகையில் இருக்கக் கூடாது. இந்திய இறையாண்மை ஒருமைப்பாட்டுக்கு எதிராக அமைந்து விடக் கூடாது. கண்ணப்பனுக்கும், சுதர்சனத்துக்கும் ஏற்பட்ட மாறுபட்ட கருத்துக்களால் கண்ணப்பன் இங்கு உணர்ச்சி வசப்பட்டார். இலங்கை தமிழர்கள் கொல்லப்படுவதற்கு இந்திய அரசு சாதகமாகவோ, தூண்டு கோலாகவோ இருக்கிறது என்ற கருத்தில் அவர் பேசியது நான் எதிர்பார்க்காதது.
கண்ணப்பன் தீவிரமாக சிந்தித்து துடுக்காக பேசக் கூடியவர். ஆனால் கடுப்பாக பேசிவிட்டார். அந்த வார்த்தைகளை அவைக் குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று பரிந்துரைக்கிறேன். (அந்த வார்த்தைகளை சபைக்குறிப்பில் இருந்து நீக்க சபாநாயகர் உத்தரவிட்டார்).
இந்த தீர்மானத்தை நிறைவேற்றுவதில் கருத்து மாறுபாடு இல்லை. இலங்கையில் செல்வா காலத்தில் இருந்தே உரிமை போராட்டம் தொடங்கி விட்டது. அற வழியில் போராடி பயனற்றுப்போன பிறகு அவரது வழித் தோன்றல்கள் போராளிகளாக மாறினார்கள். ஒரு குழுவாக அவர்கள் இருந்து போராடியிருந்தால் நேபாளம் போல வெற்றி பெற்று இருப்பார்கள். வேறு பல நாடுகளை போல விடுதலை பெற்றிருப்பார்கள். போராளிக் குழுக்களுக்குள்ளேயே நடந்த மோதல் காரணமாகத்தான் இந்த போராட்டம் பலவீனமாகி விட்டது. இன்று அவர்களுக்கு பரிந்துரை செய்து பேச வேண்டி இருக்கிறது.
இலங்கையில் விடுதலை பெற சகோதர யுத்தத்தை நிறுத்துங்கள் என்று போராளிகளுக்கு வேண்டுகோள் விடும் நிலைமை ஏற்பட்டது. ஒரு குழு இன்னொரு குழுவுடன் மோதும் போக்கை கடை பிடித்தது.தலைவர்கள் கொல்லப்பட்டார்கள், வெட்டப் பட்டார்கள், சுடப்பட்டார்கள்.அங்கு ம.பொ.சி. போன்று இருந்த அமிர்தலிங்கம் கொல்லப்பட வேண்டியவரா? விருந்துக்கு அழைக்கப்பட்டு சிற்றூண்டி வழங்கி தேனீர் எடுத்து வர அவரது மனைவி மங்கையற்கரசி சென்று வருவதற்குள் கணவரும் உடனிருந்த தோழர்களும் பிணமாக கிடந்தார்கள்.
போராளிகளே அவர்களுக்குள்ளேயே அடித்துக் கொண்டு போராட்டத்தை பலவீனமாக்கி விட்டார்கள். போராட்டம் வெற்றிபெறவில்லை. நமக்குள் ஒற்றுமை இல்லாததால்தான் சிங்கள ராணுவம் ஏறி மேய்கிறது. இருப்பினும் தாங்கி பிடிக்கும் தாய் உள்ளம், தொப்புள் கொடி உறவு இருப்பதால் காப்பாற்ற வேண்டும் என்று விரும்புகிறோம்.
இந்திய அரசை குறை சொல்லி பயன் இல்லை. இந்த காரணத்துக்காகவே ராஜீவ் காந்தி உயிரை இழந்தார். அந்த குடும்பத்தில் இன்னும் மனித நேயம் இருக்கிறது. என்பதை சமீபத்தில் நடந்த சம்பவங்கள் தெரிவிக்கின்றன. வேலூர் சிறைச்சாலை சம்பவமாகட்டும், சோனியா மன்னிப்பு வழங்கிய சம்பவமாகட்டும், அவர்களிடம் மனித நேயம் குடி கொண்டு இருப்பதை கண்கூடாக காண்கிறாம். அந்த மனித நேய அடிப்படையில் இந்த தீர்மானத்தை எண்ணிப்பார்த்து அனைவரும் ஏற்றுக் கொள்ள வேண்டும்.” இவ்வாறு கருணாநிதி பேசினார்.
பின்னர் அவர் வாசித்த தீர்மானம் வருமாறு: ”இலங்கையில் அமைதியை ஏற்படுத்துவதற்காக அங்கு மோதலில் ஈடுபடும் 2 பிரிவினர்களுக்கிடையே இந்திய அரசு பேச்சு வார்த்தைக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். அங்கு அமைதி ஏற்படுத்த அரசியல் தீர்வுகாணும் வகையில் பயனுள்ள பேச்சு வார்த்தைகளுக்கு ஏற்பாடு செய்ய மத்திய அரசு முன்வரவேண்டும். இந்த தீர்மானத்தை நான் முன்மொழிகிறேன்.”
இதை சுதர்சனம் (காங்கிரஸ்), ஜி.கே.மணி பா.ம.க.), கண்ணப்பன் (ம.தி.முக.) ஆகியோர் ஏற்பதாக வழி மொழிந்தனர். பின்னர் இந்த தீர்மானம் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.
நன்றி: அதிகாலை (இணையம்)
Thank you :: http://www.thesamnet.co.uk

சிறிசபாரத்தினத்தின் படு கொலையின் பின்னர் வெளிவந்த இது தமிழீழ விடுதலை இயக்கத்தின் எழுச்சிப் பத்திரிகையில் வெளியிட கலைஞர் கருணாநிதி அவர்களினால் எழுதப்பட்ட சிறு குறிப்பு.
“தாங்கிக்கொள்ள முடியவில்லை தவிக்கிறேன்” – கலைஞர்
ஈழவிடுதலைப போராளிகளின் இனமானத்தலைவர்களாக ஒளிவிட்ட தங்கத்துரை குட்டிமணி ஜெகன் மூவரும் இலங்கையின் வெலிக்கடைச் சிறையில் கொல்லப்பட்ட பின்னர் தமிழீழ விடுதலை இயக்கத்ததை தலைமையேற்று ஈழவிடுதலைப் போராட்டத்தை நடாத்தியவர் அஞ்சா நெஞ்சம் தலைவர் சிறி சபாரத்தினம் ஏதிரியைத் தடுத்திட எடுத்திடவேண்டிய ஆயுதங்கள் இனத்தின் இரத்தத்தையே குடித்து மகிழத் தொடங்கிவிட்டது.
ஈழவிடுதலை இன்னும் எவ்வளவு தொலைவில் இருக்கிறது என்று தெரியாத நிலையிலேயே ஆட்சிப் பொறுப்பிற்கு யார் வருவது என்பதில் போராளிகளின் பல்வேறு குழுக்கள் ஆயுதம் தாங்கிப் போரிட்டு ஒருவரையொருவர் மாய்த்துக்கொண்டு மடிந்து போகிற அவலம் இப்போதே ஆரம்பமாகிவிட்டது.
கூட்டுச்சேர்ந்த ஒற்றுமை நெடிது நாள் நிற்கவில்லை.
யாரோ சாமர்த்திய சாலிகள் “சகுனி” வேலையில் இறங்கி வெற்றி பெற்றுவிட்டனர். இந்தப் பிரித்தாளும் சக்திக்கு ஈழவிடுதலைப் போராளிகளின் பாசறைகளில் எப்படியோ நடை பாவாடை விரிக்கப்பட்டுவிட்டது.
ஏதிரிகளை மறந்துவிட்டு தங்களுக்குள்ளேயே மோதிக் கொள்ள “குருஷேத்திரம் அமைத்துக் கொண்டார்கள்.
மதுரையில் இலங்கைத்தமிழர் பாதுகாப்பு மாநாடு – மத்திய அரசின் சார்பில் குழு ஒன்று இலங்கையில் பேச்சு வார்த்தை. இப்படியொரு வாய்ப்பை கலைப்பது போல யாரோ நடத்துகிற சகுனி வேலையில் போராளிகள் பலியாகலாமா? என்ற கேள்வியை மதுரைக்கு வந்தபோரளிகளிடம் கேட்டோம்இ அனைவருமே எங்கள் வேண்டுகோளை ஏற்று ஒற்றுமையுடன் செயற்படுவதாக உறுதி மொழி உரைத்தனர்.
ஆனால் மீறிவிட்டனர்! எல்லோருமல்ல! சிலர் மீறிவிட்டனர்.
போராளிகளின் தலைவனையே சுட்டுத்தீர்த்துவிட்டனர். சகுனியின் சூழ்ச்சி பலித்து விட்டது. ஆடுகள் முட்டிக்கொள்ள : அப்போது வழியும் இரத்தத்தை நரிகள் குடித்து மகிழ்கின்ற கதையைப் பால பாடத்திலேயே படித்திருக்கிறோம்: படித்ததை மறந்தவர்களையெண்ணிப் பதைத்துப்போகிறோம்! விரக்தியடைகிறோம்!
உடன்பிறப்பே! சீரங்கப்பட்டினத்து திப்புசுல்தான் கதையே ஞாபகத்திற்கு வருகிறது.
“எட்பக் வண்ண சிறுமைத்தே ஆயினும் உள்பகை உள்ளதாம் கேடு”
- எழுச்சி இ ஜுலை – ஆகஸ்டு 1986
Subscribe to:
Posts (Atom)