http://www.karainet.org/files/TELO_leader_20years_anniversary_20060506.mp3
தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் தோழர் சிறி சபாரட்ணத்தின் தலைமையை ஏற்று ஈழ விடுதலைக்காக தமது இன்னுயிர்களைத் தியாகம் செய்த எமது வீரமைந்தர்களின் தியாகங்கள் அளப்பரியவை.
எமது ஈழ விடுதலைப் போராட்டம் திசை திருப்பப்பட்டு பாசிச புலிகளின் தலைவர் பிரபாகரனின் ஏக பிரதிநிதித்துவ மோகத்தின் நிமித்தம் புலிகள் தமது பாசிச கொள்கையை பரவவிட்டு எம்மியக்கத்தின் உன்னதமான செயலதிபர் சிறிசபாரத்தினம் உட்பட பல தோழர்களையும் காவு கொண்டு இரு தசாப்தங்களுடன் ஈராண்டுகள் முடிவுற்றாலும் எம் இதயங்களில் வாழுகின்ற அந்த வீர மைந்தர்களை தமிழீழ விடுதலை இயக்கத்தினராகிய நாம் அவர்களை என்றென்றும் நன்றியுடன் நினைவுகூர கடமைப்பட்டுள்ளோம்.
புலிப்பாசிசம் பகிரங்கமாக சகோதரப் படுகொலைகளை கட்டவிழ்த்து விட்ட சித்திரை மாதம் முப்பாதாம் திகதி முதற் கொண்டு மே மாதம் ஆறாம் திகதி வரையான அந்த துரோகம் விளைந்த நாட்களை வீரமைந்தர்கள் தினம் எனக் கொண்டு அவர்களின் தியாகங்களை உள்ளங்களில் இருத்தி அவர்களுக்கான அஞ்சலியை செலுத்துமுகமாக இந்த புனித தினங்களில் தாயகத்திலும் புலம்பெயர் தேசங்களிலும் நடைபெற இருக்கின்ற அஞ்ஞசலி நிகழ்வுகளில் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு தமிழீழ விடுதலை இயக்கத்தினராகிய நாம் தோழமையுடன் அனைவரையும் அழைக்கின்றோம்.
‘நாம் வன்முறை மீது காதல் கொண்ட மன நோயாளிகளோ அன்றி அது போன்ற நோய்களால் பாதிக்கப்ட்டவர்களோ அல்ல: மாறாக ஒரு தேசத்தின் விடுதலைக்காக போராடும் போராளிகள்” - தேசபிதா தங்கத்துரை.
தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ)
தொடர்புகட்கு :-
0049 - 1733 932 687
0049 - 1520 458 5172
0049 - 1701 786 194
Monday, 21 April 2008
Subscribe to:
Comments (Atom)