10 மே 2008 இல் டோட்முண்ட் ஜேர்மனியில் எமது தலைவர் சிறீசபாரத்தினம் மற்றும் இருநூறுக்கும் மேற்பட்ட தோழர்கள் புலிகளால் படுகொலை செய்யப்பட்ட நாளான, இன்று அவர்களையும் எமது இயக்கத்தில் இருந்த தமிழர் போராட்டத்திற்காக தம்மை அர்ப்பணித்து உயிர்த் தியாகம் செய்த தோழர்களையும், பொது மக்களையும் அதே நேரத்தில் இதர இயக்களில் தியாகம் செய்த போராளிகளையும் நினைவு கூர்ந்துள்ளோம்.
எமது ரெலோ போராளிகளும் நாமும் புலிகளின் கடந்தகாலப் படுகொலைகளில் இருந்து இன்றுவரை மீளமுடியாததும் ஏற்றுக்கொள்ள முடியாததுமான நிலையில் உள்ளோம். இது எமது அன்றாட வாழ்விலும் அரசியல் உறவுகளிலும் கூட மிகுந்த பாதிப்புக்களைக் கொண்டவர்களாகவே வாழுகின்றோம்.
இந்த படுகொலை செய்யப்பட்ட நாளில்
1.எமது தலைவர் சிறீசபாரத்தினத்தையும் தோழர்களையும் புலிகள் படுகொலை செய்ததை நாம் வன்மையாகக் கண்டிக்கிறோம்.
2. எமது தமிழ் போராட்ட இயக்கங்கள் தம்மிடையேயும் தமிழர்களிடையேயும் கொலை செய்வதை நிறுத்த நிபந்தனையின்றி எல்லா வழிகளிலும் முயற்சி செய்ய வேண்டும்.
3.தமிழர்களுக்கான அரசியற்தீர்வை அடைய எல்லா ஜனனாயக முறைகளையும் மேற்கொள்ள வேண்டும்.4.தமிழ் அமைப்புக்கள் ஒரு பொதுவான உடன்பாட்டுக்கு உடனடியாக முன்வரவேண்டும்என்றும் கோருகின்றோம்.
பிற்குறிப்பு:- இதர தமிழ் அமைப்புகளும் இதிற் பங்குகொண்டன.
தமிழ் ஈழ விடுதலை இயக்கம் - (ரெலோ)