Tuesday, 13 May 2008

முப்பதாண்டு அரசியல் பணிக்கு எமது ஆழ்ந்த அஞ்சலி.

சமூக நலத்துறை அமைச்சர் திரு டக்ளஸ் தேவானந்தா அவர்களின் அமைச்சு ஆலோசகரும்இ ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் மூத்த உறுப்பினருமான செல்வி மகேஸ்வரி வேலாயுதம் 13ஃ05ஃ2008 அன்று இரவு 8 மணியளவில் புலிகளால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

அந்திமகால சுகயீனத்தில் இருக்கும் தனது தாயாரான இளைப்பாறிய ஆசிரியை ஈஸ்வரி வேலாயுதம் அவர்களை மிக நீண்ட காலத்தின் பின் ஐரோப்பாவில் வசித்த தனது சகோதரர்களோடு சில தினங்கள் உடனிருந்து பராமரிக்க சென்ற அவரை கரவெட்டியில் உள்ள அவர்களது இல்லத்தில் வைத்து புலிகள் பலி கொண்டுள்ளனர்.

மனித கௌரவத்திற்கான மன்றத்தின் செயலாளராக இருந்த செல்வி மகேஸ்வரி வேலாயுதம் தமிழ் மக்களின் அரசியல் உரிமைப் போராட்டம் வீச்சம் பெற்ற 1980களின் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்துக்கு ஆதரவு கொடுத்து உழைத்தவர். 1990களின் ஆரம்பத்தில் இலங்கை சிறைகளில் சாதாரண பிணை மூலம் வெளியில் வரக்கூடிய கைதிகளாக இருந்த நூற்றுக்கு மேற்பட்ட தமிழ் இளைஞர்கள் விடுதலைகாக அயராது பணியாற்றியவர். 1990களின் நடுப்பகுதியில் இருந்து ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியில் தன்னை முழுமையாக இணைந்து புலிகளால் கொல்லப்படும் வரை பணியாற்றி வந்தவர்.

வகை தொகையில்லாமல் தொடரும் புலிகளின் கொலைப் பட்டியல் மக்களுக்காக தொண்டாற்றிய இன்னொரு மனித உரிமை வாதியை காவு கொண்டுள்ளது. சட்டத்தரணி செல்வி மகேஸ்வரி வேலாயுதம் அவர்களின் கோர மரணம் எம்மை நோக்கி எழுப்பும் கேள்வி 'புலிகளின் ஏக தலைமைத்துவ பாசிசம்' இன்னும் எத்தனை விலைமதிப்பில்லா மனித உயிர்களை பலி கொள்ளப் போகிறது? இதற்கு ஒரு முடிவே இல்லையா?
செல்வி மகேஸ்வரி வேலாயுதம் அவர்களின் இழப்பால் துயருறும் அவரது குடும்பத்தினர்இ உறவினர்கள்இ நண்பர்கள் மற்றும் தோழர்களுக்கு எமது ஆழ்ந்த அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம். கடந்த முப்பதாண்டுகளாக தொடர்ந்து தமிழ் மக்களுக்கு அரசியல் பணி ஆற்றிய அவருக்கு எமது ஆழ்ந்த அஞ்சலி.

- தமிழ் ஈழ விடுதலை இயக்கம் - (ரெலோ)