Friday, 18 April 2008

என்றும் மறவோம்! எதையும் மறவோம்! எப்படி மறப்போம்!

எமது புரட்சித் தலைவர் சிறீ சபாரத்தினம் அவர்கட்கும் அவருடன் கொலை செய்யப்பட்ட ரெலோ போராளிகளுக்கும் எமது அஞ்சலிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்களின் இழப்பு ஈடுசெய்யும் இழப்பல்ல நீங்கள் உயிர் நீத்த விதம் எவரும் மறக்கவோ அல்லது மறைக்கவோ முடிந்த விடயமல்ல தமிழர் வரலாற்றில் இரத்தக்கறை படிந்த 1986 என்றும் எவராலும் மறக்கமுடியாதது எமது இதயங்களை ஈட்டியால் குத்திக்கிழிக்கப்பட்ட நிகழ்வாகும்

பழையனவற்றை மறந்துவிடுங்கள் என்று கேட்கும் புலிக் கும்பலே!
நாம் எதை மறக்கவேண்டும் என்று கேட்கிறீர்கள்

தெருவோரங்கள் எங்கும் உயிருடனும் குறையுயிருடனும் சடலங்களாகவும் அடுக்கப்பட்டு எமது தோழர்கள் டயர்கள் போட்டு எரிக்கப்பட்டதையா?

கண்கள் கட்டப்படாமலே சுட்டுக்கொல்லப்பட்டதையா?

கண்நோயினால் பாதிக்கப்பட்டு ஒரு அறையில் படுத்திருந்தவர்கள் ஏன் கொல்லப்படுகிறோம் என்று தெரியாமலே கொல்லப்பட்டதையா?

சரணடைந்தால் மன்னிப்போம் என்று கூறி சரணடைந்தவர்களை கொன்று குவித்ததையா?

திசை தெரியாத ஆட்டுக்குட்டிகள் போல எங்கு செல்வதென்று புரியாது தவித்த கிழக்கு மைந்தர்களை பார்த்து கேலியுடன் சுட்டுத்தள்ளியதையா?

உயிருடன் சிதறடிக்கப்பட்ட தோழர்களின் உடல் அங்கங்கள் துடி துடித்து அடங்கிய காட்சியையா?;

சகோரங்களை அனுப்பி உடன் பிறந்த சகோதரங்களை சுட்டு வேடிக்கை பார்த்ததையா?புகலிடம் கொடுத்த பொது மக்களை அழித்ததையா?

இவைகள் மட்டுமல்ல கைது செய்யப்பட்ட தோழர்கள் கொடூர சித்திரவதைகளால் கொன்ற வரலாற்றையா? எதை மறக்க?

புலிகளே இந்தக்கொலைகளால் நீங்கள் சாதித்தது என்ன?எதுவுமே இல்லை.

உங்களின் இரத்த தாகம் இன்று வரை அடங்கியதா?

உங்கள் போரின் நோக்கம் நிறைவேறியதா?அல்லது சாத்தியமா?

அதுவும் இல்லைதமிழ் மக்களின் உரிமைகளுக்காகவா போராடுகிறீர்கள்?

இல்லவே இல்லை

புலிக் கும்பலே!இந்த இழப்பு! இந்த துரோகம்!

இந்த கொலை வெறி !

எதையும் மறக்கமாட்டோம்! என்றும் மறக்கமாட்டோம்!

உயிர் உள்ளவரை மறக்கமாட்டோம்!

இது துரோகத்தின் வரலாறு! நீங்கள் படைத்த கொலை வெறி வரலாறு !!

இது என்றென்றும் அழியாது!!!

முனைநாள் ரெலோ போராளி – லண்டன்; 6-05-2007