Friday, 18 April 2008

அண்ணன், தம்பி, மாமன், மச்சான் எதுவுமே இந்த கேடுகெட்ட கும்பலுக்கு தெரியவில்லை. உலகிலே சரண் அடைந்தவர்களை கொலை செய்த வரலாறு புலிகளால் ஆரம்பிக்கப்பட்டது.

கண்ணீர் அஞ்சலி செய்வதோடு மட்டுமல்லாது இந்நாளில் கயவர்களை அம்பலப்படுத்தி மக்களின் முன் நிறுத்துவோம் என்று புலம்பெயர்ந்து உதிர்களாக சிதறி வாழ்கின்ற செயலதிபர் சிறி அண்ணாவின் வழி செல்லும் நாம் எல்லோரும் ஓர் சபதம் எடுப்போம். அடிவருடியான செல்வம் அடைக்கலநாதனை மக்களுக்கு இனம்காட்டுவோம். சிறி அண்ணாவிற்கும் அவரோடு மரணித்த அந்த போராளிகட்கும் நாம் செய்யும் உண்மையான அஞ்சலி இந்த துரோகி செல்வம் மக்களால் கல் எறிந்து துரத்தப்படவேண்டும். 1983 இனக்கலவரம் ஓர் இனத்தால் மற்றொரு இனத்தின் மேல் இடம் பெற்றது. அதுதான் கறுப்பு யூலை. ஆனால் 1986 ஏப்ரல் மே மாதங்களில் தமிழ் இனத்தின் வரலாற்றில் இரத்தக்கறை படிந்த வரலாறு உருவாகியது. அது 21 ஆண்டுகள் ஆகியும் தொடரும் அபாயம். இது எதுவரை தொடரப் போகுதோ!
அண்ணன், தம்பி, மாமன், மச்சான் எதுவுமே இந்த கேடுகெட்ட கும்பலுக்கு தெரியவில்லை. உலகிலே சரண் அடைந்தவர்களை கொலை செய்த வரலாறு புலிகளால் ஆரம்பிக்கப்பட்டது. புலிகளை விட கொடுமையானவர்கள் இன்று பதவிக்காக எலும்புத்தோலுக்காக சோரம்போன செல்வம் மற்றும் சிறி அண்ணாவின் மரணத்தை நியாயப்படுத்த சிவாஐலிங்கம் போன்றவர்கள் தமிழ் மக்களின் போராட்ட வரலாற்றில் கரும்புள்ளிகள்.

இவர்களை அன்னியப்படுத்துவதுடன் மரணித்த அத்தனை வீர மைந்தர்கள் என்றென்றும் தமிழ் இனத்தின் தலைவன் சிறி அண்ணாவிற்கும் சிரம்தாழ்த்தி கண்ணீரால் அஞ்சலி செலுத்துகிறோம். உங்கள் பணி தொடர்வோம்.

வுநுடுழுவின் தியாயங்களை உரமாக உண்டு தமிழர்களின் ரிமைப்போராட்டம் மீண்டும் எழுச்சி கொள்ளும். – என்றென்றும் உங்கள் நினைவுகளோடு வாழும் ரெலோஸ்ட்டுக்கள் சார்பாக செந்தில்(நிமு)