Friday, 18 April 2008

ஸ்ரீசபாரத்தினம் மற்றும் போராளிகள் 22வது சிரார்த்ததினம் may 6 2008

தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவா அண்ணன் ஸ்ரீசபாரத்தினம் உட்பட நூற்றுக்கணக்கான அவ்வியக்கத்தின் போராளிகள் வன்னிபுலிகளால் கொலை செய்யப்பட்ட 21வது ஆண்டு நினைவு தினம் இன்றாகும். வன்னிபுலிகளின் சகோதர வெறியாட்டம் இற்றைக்கு 21 ஆண்டுகளிற்கு முன்னர் நடந்ததன் உச்சகட்டம்தான் இன்றைய நினைவுநாள். இவ் நிகழ்வு தமிழீழ போராட்டத்தில் பாரிய திருப்புமுனையை தோற்றுவித்து போராளிகளை கொலை செய்யும் புதிய புரட்சியை கட்டவிள்த்துவிட்ட தினமும் கூட. நிராயுத பாணிகளாகவும், கண்வருத்தம் மற்றும் அம்மை நோயினால் அவதிப்பட்ட நூற்றுக்கணக்கான போராளிகளை வ.புலிகள் வேட்டையாடியதுடன் அவர்களில் சிலரை உயிருடன் ரயர் போட்டு தீயில் வீசிய துயர்மிகு நாளும் இந்நாள்.
சிங்கள இனவாத அரசினை மிஞ்சிய புலிகளின் கொரூரம் தமிழினத்தின் மீது பாய்யச்சப்பட்ட இவ் தினத்தினை தமிழினம் எழுதில் மறந்துவிடாது. ஆனால் தமது சகாக்கள் மற்றும் தலைவனது இழப்பினை மறந்து இன்றை ரெலோ இயக்கம் புலிகளின் காலில் மண்டியிட்டு கிடப்பதுதான் மிகவும் துயரமான நிகழ்வாகும். பதவிகளுக்காகவும் சொகுசான வாழ்வுக்காகவும் தமது தலைவனையும் சக தோழர்களையும் கொலை செய்த கும்பலுடன் இன்று கைகோர்த்து கும்மாளமிடும் ரெலோ கும்பல்களின் இவ் பச்சை துரோகத்தையும் உண்மையான விடுதலையை நேசிப்போர் எழுதில் மறந்து விடமாட்டார்கள். வன்னிபுலிகளின் பாசிச வெறியாட்டத்திற்கு பலியான அண்ணன் ஸ்ரீசபாரத்தினம் உட்பட அவருடன் சேர்த்து புலிகளால் பலியெடுக்கப்பட்ட போராளிகளையும் நெருப்பும் நினைவு கூர்ந்துகொள்கின்றது.