Friday, 18 April 2008

தமிழீழ மக்களின் நம்பிக்கை நட்சத்திரம் தலைவர் சிறீ சபாரத்தினம் எழுதியவர் - தோழர் தமிழ்ச்செல்வன(பத்திரிகை ஆசிரியர்)

தமிழீழ மக்களின் இதயத்தை கொள்ளை கொண்ட… தமிழீழ மக்களின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கிய …புதுயுகத்தின் புரட்சிப் புதல்வன் தலைவர் சிறீ சபாரத்தினம்.

தலைவர் சிறீ சபாரத்தினம் 1986 ம் ஆண்டு மே 6ம் நாள் தமிழ் ஈழ விடுதலைப்புலிகள் இயக்கத்தினரால் படுகொலை செய்யப்பட்டார். அவரது மரணம் உறுதிப்படுத்தப்பட்டபோதிலும், அதனை முற்றிலுமாக நம்ப முடியவில்லை , ஏனெனில் அவரது படைப்புக்கள் இன்னும் உயிருடன் இருக்கின்றன. அவரது சொற்கள் மறைந்ந மாமேதை ஒருவரின் மறக்கமுடியாத ,மாறாத சொற்களாக ஒலிக்காமல், உயிருள்ள நண்பரின் அன்புச் சொற்களாக ஒலிக்கின்றன.

ஏனெனில் அவை நமக்கு அறிவுபுகட்டுகின்றன, நம்மோடு விவாதிக்கின்றன, உயிர்த்துடிப்போடு ஒலிக்கின்றன, பதிய புதிய கருத்துக்களை உணர்த்துகின்றன. அவர் வாழ்க்கையை அறிந்தார்: அதனை நேசித்தார்: எனவேதான் வாழ்க்கையை பாழ்படுத்திய ஒவ்வொன்றையும்- ஒவ்வொருவரையும் அவர் வெறுத்தார். சிறிலங்காவின் ஆக்கிரமிப்பாளர்களை வெறுத்தார் ஏனெனில், அது எமது தேசத்தை ஆபாசக் களஞ்சியமாக்கியது, இருள் செறிந்த ப+மியாக்கியது, தமிழர்களை தமது சொந்த மண்ணில் இரண்டாம் தர பிரiஐகளாக்கியது.

அவர் விரும்பியது புத்தம் புதிய ப+மி: தமிழ் மக்களுக்கான பரந்த நிர்மலமான தமது பிரதேசத்தில் பாதுகாப்பான , தாமே தீர்மானிக்கக்கூடிய வாழ்வுமே. தமிழ் பேசும் மக்களுக்கான புத்தம் புதிய ப+மியை நிர்மாணிக்க தமிழ்பேசும் மக்கள் அனைத்து ஒடுக்கு முறைகளிலுமிருந்து விடிவு பெற தமிழ் பேசும் மக்கள் சமாதானத்தை நோக்கி முன்னேற, ஒடுக்குமுறையாளர்க்கு எதிராக ஆயுதக் கிளர்ச்சிவரை தமிழ் பேசும் மக்கள் போராட வேண்டும் என்பதை உணர்ந்தவர்: உணர்த்தியவர் தலைவர் சிறி சபாரத்தினம்.

சிறிலங்கா அரசின் ஒடுக்குமுறையால் பாதிக்கப்பட்ட தமிழ்பேசும் மக்களுக்கு கௌரவமான வாழ்வு மீண்டும் வரும் என்ற நம் பிக்கை அற்றுப் போய்க்கொண்டிருக்கிறது இதற்குரிய பரிகாரம் அரசியல் வாதிகளை மாற்றுவதால் ஏற்படப்போவதில்லை.

சரித்திரத்திலே கருச்சிதைவுகளும் சுகப்பிரசவங்களும் உண்டு. சரித்திரத்திலே சுகமான தொரு புரட்சி பிரசவிக்கவேண்டுமானால், வெகு ஜனங்கள் கிளர்ந்தெழுந்து ஆட்சியை கைப்பற்றி ஒரு புதிய மக்கள் நிர்வாகத்தை ஏற்படுத்தி சுரண்டலையும் - வர்க்க பேதங்களையும் இல்லாமல் செய்யவேண்டும், மக்கள் நாட்டின் வளங்களின் எஜமானர்களாகவேண்டும் , இன்றைய அரசியல்வாதிகள் சமூகத்தின் இந்தப்புனருத்தாரண வேலையை செய்வதற்கு தகுதியற்றவர்களாகிவிட்டார்கள். சுதந்திரமும், சமாதானமும் சமத்துவமும் இன்று அடைய முடியாததொன்றாகிவிட்டது அப்படியானால் சமுதாயமே ஒரு அன்னிய சமுதாயமாகிவிட்டது. பந்தம் பிடிப்பதும் லஞ்சம் கொடுப்பதும் சமுதாய மரபாகிவிட்டது இதனை தடுத்து நிறுத்த முற்பட்ட ஒரு சிலரையும் அரசு தொடர்ச்சியாகவும், விட்டுக்கொடுக்காமலும் ஒடுக்குகின்றது. நேர்மைக்கும் -மனித நேயத்திற்குமான போராட்டங்களை அரசு எப்பவும் விட்டதாக தெரியவில்லை. மக்கள் மடையர்களாகவும், கோழைகளாவும் மாறாதுவிட்டால் அவர்களுக்கு வாழும் உரிமை மறுக்கப்படுகிறது. மனித இனத்திற்கு சர்வவியாபகமாக ஒடுக்கு முறையை மன்னித்து மறக்கும் மனோபாவம் வேண்டுமாம்.

இவற்றை அனுமதித்தால் தமிழ்ச் சமுதாயமே காட்டுமிராண்டித்தனமாக போய்விடும் என்பதனைக் அன்றேல் வாழ்க்கையில் ஏதாவது சிறிய மாற்றத்தை ஏற்படுத்தவேண்டுமானால் விட்டுக்கொடாத, பிடிவாதமான போராட்டம் இல்லையெனில் அது இம்மியளவும் நடக்கப்போவதில்லை. அதற்காக புரட்சிகர போராட்ட அமைப்புகளை பலப்படுத்தாவிடில், கட்டி வளர்க்;காதுவிடில் மக்களுக்கு விமோசனமோ விடுதலையோ வந்துவிடப்போவதில்லை. இதனை தலைவர் சிறி சபாரத்தினம் நம்பியதன் விளைவே அவரது போராட்ட வாழ்வும், தமிழீழ விடுதலை இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டதுமாகும்.

சிறிலங்கா ஒடுக்குமுறையாளர்களின் அடக்குமுறையை காணச்சகிக்காத தவைவர் சிறிசபாரத்தினம் தனது குணாம்சங்களை ஒத்த பல இளைஞர்களுடன் சேர்ந்து சிறிலங்கா அரசுக்கு எதிரான வன்முறைப் புரட்சியை மேற் கொண்டார்.

இப்போராட்ட காலகட்டத்தின் போது தலைவர் சிறி சபாரத்தினம் உட்பட 42 இளைஞர்கள் 1973 மாசி 9ம் , 10ம் திகதிகளில் கைது செய்யப்பட்டனர். தலைவர் சிறி சபாரத்தினம் முதலில் நீர் கொழும்பு சிறையிலும் பின்னர் அநுராதபுரம் சிறையிலும் அடைக்கப்பட்டார்.

1974 தை மாதத்தில் அரசியற் புரட்சியாளனாக தேடப்பட்டு இந்தியாவில் கைது செய்யப்பட்ட தளபதி குட்டிமணியும் முதலில் நீர் கொழும்பு சிறையிலும் பின்னர் அநுராதபுரம் சிறையிலும் அடைக்கப்பட்டார்.சிறிலங்கா ஒடுக்குமுறையாளர்களின் இச்சிறைக்கூடங்களில் தான் தலைவர் சிறி சபாரத்தினமும் தளபதி குட்டிமணியும் முதன்முதலில் சந்தித்துக் கொண்டனர்.
இருவரினதும் ஒரே கருத்து – ஒரே இலட்சியம்- ஒரே நோக்கு- ஒரே பார்வை : தேசபிதா தங்கத்தரையினது நடைமுறையுடன் ஒத்தகொள்கைகள்: தத்துவங்கள் இவைகள்தாம் தமிழ்பேசும் மக்களது விடிவிற்கு நீண்ட கால வேலைத்திட்டத்துடன் ஆயதம் ஏந்திப்போராடும் ரெலோவுடன் தவைவர் சிறி சபாரத்தினம் தன்னை இணைத்துக்கொள்ள வழிவகுத்தது.

1977ம் ஆண்டு தலைவர்விடுதலை செய்யப்பட்டபோதிலும், சிறிது நாட்கள் கழித்து துரையப்பா கொலை வழக்கு சம்பந்தமாக சந்தேகத்தின் பேரில் சிறி சபாரத்தினம மீண்டும் கைது செய்யப்பட்டார்;. ஒராண்டுகாலம் ஒடுக் கு முறையாளர்களின் வதைக்கூடங்களில் மிதிக்கப்பட்ட தலைவர் 1978ல் விடுதலை செய்யப்பட்டார். விடுதலை செய்யப்பட்டதும் ரெலோவுடன் தன்னை இணைத்துக்கொண்டார் தலைவர் சிறி சபாரத்தினம்.தமிழீழ விடுதலை இயக்கத்தின் வேலைத்திட்டங்களில் ரெலோவின் மூத்த தலைவர்களான தேசபிதா தங்கத்துரை – தளபதி குட்டிமணி உட்பட பல போராளிகள் வெலிக்கடைச்சிறையில் படுகொலை செய்யப்பட்டதும் ரெலோவை வழி நடத்தும் பொறுப்பை ஏற்றுக் கொண்டவர்
உணர்வுப+ர்வமாக செயற்;பட்ட தலைவர் சிறி சபாரத்தினம் ஆயதப் பயிற்சி பெற்றதோடு அரசியல் கல்வியும் கற்றுக் கொண்டார். இவரது எளிமையான வாழ்வும் மக்களுடன் ஒன்றிணைந்த போராட்ட நோக்கும் போர்க்குணாம்சமும் தான் சிறி சபாரத்தினத்தை பெரும் தலைவராக்கியது.

தமிழீழமக்களது உண்மையான விடுதலையும் - ஒடுக்கப்பட்ட சிங்கள மக்களது நலன்களையும், இந்திய உப கண்டத்தினதும், இந்து மகா கடற்பிராந்தியத்தினதும் பாதுகாப்பையும், கருத்திற் கொண்டு தமிழீழ விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்தவர் தலைவர் சிறி சபாரத்தினம். அனைத்து மக்களினதும் ஆயுதப்போராட்டத்தின் மூலம் விடுதலையை வென்றெடுக்க பல்லாயிரக்கணக்கான இளைஞர்களை புரட்சியாளர்களாக்கியவர் தலைவர் சிறி சபாரத்தினம்.

இலங்கையிலும் - இந்திய உப கண்டத்திலும்- இந்து மகா சமுத்திரப் பிராந்தியத்திலும் அமெரிக்க ஏகாதிபத்திய சதிகளை முறியடிக்கவும், எமது மக்களின் விடுதலையை வென்றெடுக்கவும் ஏகாதிபத்திய எதிர்ப்பு சக்திகளுடனும் - உலக ஒடுக்கப்பட்ட மக்களுடனும்- முற்போக்கு சக்திகளுடனும் மனித நேயத்தை மதிக்கின்ற அரசுகளினதும் ஆதரவுகளை வென்றெடுத்து விடுதலையை வெற்றியின் பாதையில் இட்டுச்சென்றார் தலைவர் சிறி சபாரத்தினம்.

கெரில்லாப்பாணியிலான தாக்குதலை முற்றிலும் மாற்றி, தமிழீழ மக்களது பாதுகாப்பை கருத்திற் கொண்டு சிறிலங்கா ஆயுதப்படைகளுக்கு எதிரான தாக்கதல்களை தானே முன்னின்று நடத்தியவர் தலைவர் சிறி சபாரத்தினம்.
தமிழீழ விடுதலைக்காக போராடும் ஏகாதிபத்திய எதிர்ப்பு சக்திகளை ஒன்றிணைப்பதன் மூலமே விடுதலையை வென்றெடுக்கமுடியும் என்பதில் நம்பிக்கை கொண்ட தலைவர் சிறி சபாரத்தினம் எமது தோழமை அமைப்புகளான ஈ.பி.ஆர்.எல்.எப், ஈரோஸ் உடன் கூட்டுச்சேர்ந்து ஈழம் தேசிய விடுதலை முன்னணியை (ஈ.என்.எல்.எப்) உருவாக்கியதோடு, ஒன்றிணைந்த தாக்குதல்களை நடத்தவும், பொது வேலைத்திட்டத்தில் செயற் படவும் ஆக்கப+ர்வமான செயற் திட்டங்களை தீட்டினார்.

இவ்வாறாக சர்வதேச ஏகாதிபத்திய எதிர்ப்பு சக்திகளினதும் - தமிழீழ மக்களினதும் நம்பிக்கை நட்சத்திர மாக விளங்கிய தலைவர் சிறி சபாரத்தினம் தமிழீழ விடுதலைப்புலிகளால் படுகொலை செய்யப்பட்டார்.
தலைவர் சிறி சபாரத்தினத்தின் பிரிவு தமிழ் பேசும் மக்களுக்கு மிகப் பெரிய இழப்பாகும். எனவே தான் தலைவர் சிறி சபாரத்தினம் அவர்கள் பிரிந்தார் என்று நம்புவதே கஷ்டமாகவுள்ளது ஆனால் இந்த ஆயுத மிரட்டலுக்கு பின் வாங்கி : நாம் போராட்டத்தை கைவிட்டு ஓடப்போவதில்லை தலைவர் சிறி சபாரத்தினத்தின் ப+தவுடல் மறைந்துவிட்டது என்பது உண்மைதான் ஆனால் அவர் உயிருடன் நம்மோடு உலாவிய காலத்தில் அவரை நேசித்தது போலவே, தற்போதும் நாம் அவருடைய சேவையை தொடர்ந்து செய்கிறோம். அவருடைய நஷ்டத்தை ஈடுசெய்யும் வகையில் நாம் பன் மடங்கு செயலாற்றுகிறோம்.

கற்பனைக்கு எட்டாத தீர்க்கதரிசனமும் புன்னகை தவழும் அவரது முகமும், தடித்த நெடிய உருவமுள்ள தலைவர் சிறிசபாரத்தினம் மறையாமல் இன்னும் உயிருடன் இருக்கிறார் என்ற உணர்வில் நாம் செயற்படுகிறோம்.

அவர் போல நாமும் வாழ்க்கையை நேசிக்கிறோம்1!!
அவர் போல சிலங்கா ஒடுக்குமுறையாளர்களுக்கு எதிராக இறுதிவரை போராடுவோம் !!
இதனால் நாம் என்றும் வெல்லப்படமுடியாதவர்களே1!!

தோழர் தமிழ்ச்செல்வன் அவர்களும் பின்னர் தமிழீழ விடுதலைப்புலிகளால் படுகொலை செய்யப்பட்டார் .

எழுச்சி : 1986 குரல் 09- ஜுலை –ஆகஸ்டு