தலைவர் சிறீ சபாரத்தினம் அவர்களை நினைவு கூர்தல் என்பது வருடா வருடம் நடாத்தப்படாத போதிலும் சந்தரப்பங்கள் கிடைக்கும் போதும் நாட்டு; சரியான அரசியல் சூழ்நிலைகள் ஏற்படும் போதும் பொது நிகழ்வாக ஒன்று கூடுதல் வரவேற்கப்பட வேண்டும். இதைவிட எமது தலைவர்களை மறந்து அவர்கள் பெயரில் இயங்கும் அமைப்பையும் இதை செய்ய துண்ட வேண்டிய கடமைப்பாடும் எமக்கு உண்டு. இவை எல்லாவற்றையும் விட மிகமுக்கியமான விடயம் எமது தலைவர் சிறீ சபாரத்தினமும் தோழர்களும் கொல்லப்பட்ட விதமும் இதன் பின்னணிகளும் எமது இன வரலாறு என்பதை மறந்துவிடலாகாது.
இந்த வரலாறு என்றுமே மறக்கக்கூடியதலல், இந்த வரலாறு எமக்கு தந்த பாடங்கள் என்ன? கடந் 21 வருடங்களாக நாம் பெற்ற அனுபவம் தான் என்ன? இந்ததவறுகள் இனிமேல் எமது இனத்திடையே மீண்டும் நடைபெற அனுமதிகாமல் பாதுகாக்கவும் இந்த நினைவுதினம் யாரால், எந்தப்பெயரால் உலகின் எந்தமூலையிலும் சரி நடாத்தப்பட்டாலும் விடுதலையில் அக்கறை கொண்ட எந்த ஒருதனிநபரும் , எந்த ஊடகங்களும் இதை வரவேற்று முடியுமான வரையில் சரியான கருத்துக்களை பேசியாக வேண்டும்.
இறந்து போனவர்களை நினைவு கூருவது வாழ்ந்து கொண்டிருக்கும், இனிமேல் வாழவிருக்கும் மக்களின் வாழ்கையை மேம்படுத்தவேயாகும்!!
கடந்த கிழமை சில இணையத்தள ஊடகங்கள் இந்த தோழர் சிறீசபா நினைவு தினத்தை கொச்சைப்படுதிஎழுதுவதைவிட நினைவு கூட்டத்தின் பின்னர் விமர்சனக் களத்திற்கு அழைப்பு விடுப்பதே தற்போதுள்ள எமது போராட்ட நிலையில் சரியானதாகும்.
கடந்த 6ம் திகதி மே, 2007 இரவு நடந்த தோழர் சிறீசபா நினைவுதின ஏற்பாடுகள் ஆரம்பத்தில் கலந்தரையாடலுடன் செய்வதென்று திட்டமிடப்பட்டபோதும் பின்னர் இது நினைவுதினக்கூட்டத்தில் அரசியல் மோதல்களை தவிர்த்து தோழர் சிறீ சபாவின் நினைவுகளுடன் செய்வதென்றும் ஏற்ப்பாட்டாளர்கள் ரிபிசி ஊடகத்திற்கு தெரிவித்திருந்தனர்.
கூட்டம் குறிப்பிட்ட நேரத்திற்கு ஆரம்பிக்க முடியாமல் போனது கூட்டத்தின் ஆரம்பத்தில் வருகை தந்தோர் எண்ணிக்கையில் தங்கிவிட்டது எனலாம், கூட்டம் மட்டக்களப்பு முன்னைனாள் பா.உ திரு ஜனா தலைமை உரையுடன் ஆரம்பமாகியது இந்த துலைமையுரையில் தோழர் சிறீ சபாவைப்பற்றி பெரதாக எதுவுமே சொல்லப்படவில்லை என்பது மனவருந்தக்கது இவரது பேச்சுக்குப்பின் முதலாவது பேச்சாளராக முன்நாள் ரெலோ உறுப்பினர் தனது பேச்சில் தான் ஒரு முனனாள் ரெலோ போராளி என்றும், தனது பேச்சு முழுவதுமே தனது சொந்தக் கருத்து என்றும் இது எந்த அமைப்பினடைய கருத்ததையும் பிரதிபலிககாது என்றும் கூறி தனது உரையை ஆரம்பித்தார்.
தலைவர் சிறீ சபா பற்றிய நினைவுகளையும் அவரது அரசியல் கருத்து நிலைமைகளையும் கூறி எமது இனத்திடையே இன்றுவரை நடை பெற்றுக் கொண்டிருக்கும, எமது விடுதலையை ஈடாற்றம் காண வைத்துக் கொண்டிருக்கும் தேவையற்ற கொலைகளுக்கு எதிராக குரல் கொடுக்கவல்ல இந்த நிகழ்வில் கொலைகளுக்கு எதிரான தனது கருத்துக்களை வெளிப்படுத்தி, கொலைகளை நிறுத்தமாறு கோரிக்கை விட்டார், அத்துடன் கடந்தகால தவறுகளை விமர்சித்து இனிமேல் இது நடை பெறாத உத்தரவாதம் இந்த தலைவர்கள் கொலை செய்யப்பட்ட இந்த நாளில் வேண்டி நின்றார், இது இந்த சிறீ சபா நினைவு நாளில் மிகப்பொருத்தமானதாயும், தற்போது உருவாகியுள்ள கொலைக் கலாச்சாரத்தின் உச்சக்கட்டத்தில் இது தேவையான தொன்றுமாகும்.
கடந்து போன அந்த வரலாற்று அனுபவத்தை, தோழர்கள் நினைவு தினத்தை இன்றய மிக முக்கிய தேவையுடன் இணைத்துப் பேசிய யதார்த்தம் காணப்பட்டது.
மேலும் அவரது பேச்சில் எமது தமிழ் அமைப்புக்களும், ஊடகங்களும் மாற்றுக் கருத்துக் கொண்டவர்களை துரோகிகளாயும், ஒட்டுக்குழுக்கள் என்றும் அழிக்கப்படவேண்டும் என்றும் பேசுவதை தவிர்த்து ஒன்றுபடும் சொற்பிரயோகங்கள் பாவிக்க வேண்டும் என்றும், நாம் தமிழர்கள் எமது போராட்ட காலகட்டத்தின் நிலையை கருத்திற கொண்டு நாம் மீண்டும் பேச வேண்டும் எம்மிடையே குறைந்த பட்சம் கொலை தவிர்ப்பு உடன பாடு எட்டப்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.
பா.உறுப்பினர்களும் ரெலேவின் முக்கிய தலைவர்களினதும் பேச்சுக்கள் 70களில் தமிழ் அரசியல்வாதிகள் தமது பாரளமன்ற அரசிலுக்கு பேசிய பேச்சை ஒத்திருந்ததும் பழைய வரலாறுகளை உதாரணம் காட்டியும வீர வசனங்கள் பேசி லண்டன் அரசியல் நண்பர்களை 70 காலகட்ட அரசியலுக்கு (கற்காலம் நோக்கி ) எடுத்து சென்றது இந்த அரசியல் வாதிகளின் உண்மைத்தன்மை வெளிப்பட்டது.
நினைவுதினக் கூட்டத்தில் எந்த அரசியல் பேச்சுக்களைத் தவிர்க்க வேண்டும் என கலந்துரையாடல்களைத் தவிர்த்தார்களோ அதே அரசியல்களை இங்கே தமது பேச்சுக்களாக்கினர்;, அதைவிட எந்த தலைவனடைய நினைவு பேச்சுக்களை செய்வேண்டுமோ! அதை மறந்து பேசினர், லண்டனிலுள் அரசியல் பின்னணி கொண்டவர்களின் விமர்சனங்களை அறியாதவர்களாக காணப்பட்டனர், சிலவேளை இந்த அறிக்கை அவர்களை மாற்றம் கொள்ள வைக்கும் என நம்புகிறோம்.
மற்றம் இவர்களது பேச்சுக்களில் பாராளுமன்றத்தில் நம்பிக்கையற்று ஆயும் போராட்டத்தில் ஈடுபட்ட தலைவர்களின் நினைவு தினக்கூட்டத்தில் தமது பாராளுமன்ற கதிரை அரசியலை நடாத்தினர், மேலும் ஒருபடி மேலே சென்றுதலைவர் சிறீ சபாரத்தினத்தின் கொலையை , ரெலோவின் உள்ளே நடந்த உட் கொலைகளுடன் ஒப்பிட்டுக் கூறி சிறீ சபாரத்தின் அவர்களும் நூற்றுக்கணக்கான தோழர்கள்ன் கொலைக்கும் ஒரு பொது உடன்பாடுகாட்டும் பொருள்பட பேசியது பலருடைய உணர்வுகளை கொதிப்படைய வைத்தது, இது புலிகளால் திட்டமிட்டுச் செய்யப்பட்ட மாற்ற இயக்க அழிப்பிற்கு (தனது இயக்க அழிப்பு நடவடிக்கைக்கு உட்கட்சி கொலைகளின் நியாயம் கற்பிக்கப்பட்டதின் மூலம் தான் ரெலோ இயக்கத்தின் பிரதிநிதியல்ல என்று நிரூபித்தார்.
தமிழர்களுக்கு முன்மாதிரியாக இருந்து செயற்பட வேண்டீய பாராளுமன்ற உறுப்பினர் அடுத்த தமிழர் அமைப்பை சார்ந்த பிரதிநிதியை பெயர் சொல்லி துரோகிப் பட்டம் சூட்டி தமது தலைவர்கள் நினைவுதினக் கூட்டத்தில் ஆவேசமாகப் பேசியது ஒரு தவறான விடயமாகும் அதைவிட எந்தக் கூட்டமானாலும் தான் யாரடைய ஏகப்பிரதிநிதியோ அவனுடைய ஏவலையே செய்வதை இனம் காட்டினர்.
இவர்களுக்கு முன் பேசியவரின் பேச்சில் இப்படியான பேச்சுக்களை தவிர்க்கும் படி தமிழர்களுக்கு விடுத்த கோரிக்கையை இந்தப் பேச்சாளர் அந்த மேடையில் தவிர்த்து பேசியிருக்கலாம்;, ஆனால் இவையெல்லாம் ஒருவிடயத்தை மிகவும் திட்டவட்டமாக வெளிக்கொணர்ந்தது அது சிறீ சபாரத்தினம் இவர்களின் தலைவர் அல்ல என்பதும் இவர்களின் கொடி புலிக் கொடியே என்பதும் உண்மையாகும்.
எது எப்படி இருப்பினும் இந்த நினைவ தினக் கூட்டம் கொலை செய்யப்பட்ட தலைவர் சிறீ சபாரத்தினத்தையும் அவருடன் கொலை செய்யப்பட்ட தோழர்களையும் நினைவு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இனிமேல் லண்டனில் சிறீ சபாரத்தினத்தின் நினைவு தினமோ! அல்லத அவரின் பெயரால் எந்தக் கூட்டத்ததையும் இவர்கள் நடாத்த அனுமதிப்பில்லை என்பதும் முடிவாகிவிட்டது..